கதிரை பறிபோகும் மூவர் யார்!
இலங்கை நாடாளுமன்றில் இரட்டை பிரஜாவுரிமை உடைய மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் எம்.ஏ.சுமந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முன்வந்து, அது தொடர்பில் யாராவது ஆட்சேபத்தை தெரிவித்தால் அவரது பெயரை நிராகரிக்கின்ற அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லை.

ஏனெனில் அவ்வாறான ஆட்சேபனைகளை விசாரித்து உண்மைகளை கண்டறிய அவர்களுக்கு கால அவகாசம் போதாது.

அதன் பிறகு அவர்கள் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தின் ஊடாக அதனை கேள்விக்குட்படுத்தி அவரது பதவியை பறிக்க முடியும். தென்னிலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் விடயத்திலும் அதுவே நடந்தது.

அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதில் நாங்கள் ஆராய்ந்து இருக்கின்றோம்.

புதிய திருத்தத்தின்படி இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தால் அவர்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கான தகுதியை இழப்பார்கள். இரட்டை பிரஜாவுரிமை உள்ள பலர் தற்போதைய நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள் என்ற செய்தி எமக்கு கிட்டியுள்ளது. அவர்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை நாடாளுமன்றினால் எடுக்கப்படவேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments