பின்தொடரப்பட்ட அமெரிக்க துணை தூதர்?
இலங்கை அரசின் புதிய நில சுவீகரிப்பின் பின் கீழ் பறிபோகவுள்ள வலிகாமம் வடக்கின் மயிலிட்டி பகுதிகளை இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் பார்வையிட்டுள்ளார்.
இதனிடையே அவரது விஜயத்தை பின் தொடர்ந்ததாக இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த டக் சோனெக் அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக அமெரிக்க துணை தூதர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
முன்னதாக நேற்றைய தினம் கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களது பிரதிநிதிகளை அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் அவரது பயணத்தை பின் தொடர்ந்ததாக புலனாய்பு முகவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
Post a Comment