கோணேச்சரத்தில் கும்பிட போனவர்கள்! திருக்கோணேஸ்வரம் முற்றாக சிங்கள தெருக்கடைகளின் ஆக்கிரமிப்பினை சந்தித்துள்ள நிலையில் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விதுர விக்கிரமநாயக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளனர்.

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விதுர விக்ரமநாயக்கா போன்றோரின் அமைச்சு செயற்பாடுகளுக்கு ஆசிவேண்டி, திருகோணமலை திருக்கேதீஸ்வரத்தில் ஆலய நிர்வாகத்தினரால் விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

No comments