தப்பித்து செல்ல முற்பட்டோர் தேடி பிடிப்பு!மன்னாரிலிருந்து கடல்வழி தப்பித்து இளைஞர் ஒருவர் நீந்தி கடந்த ஞாயிறு தமிழகத்தை சென்றடைந்த நிலையில் மன்னார் பேசாலை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்வதற்கு தயாராகவிருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு பெண்களின், இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 19 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அடங்குவதுடன், குழந்தைகள் இரண்டு வயதுக்கும் ஆறு வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார்   அறிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கிளிநொச்சி பிரதேசத்தை வதிவிடமாக கொண்டவர்கள்.

இவர்களை நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சப்தேக நபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குழந்தைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


No comments