அரசியல் பழிவாங்கல்:விசாணைக்குழுவிற்கு 12கோடி!



கடந்த 8 வருடங்களாக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக 504 மில்லியன் ரூபா அரச நிதி செலவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

அதில் அதிக தொகை 2020ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு செலவிடப்பட்டுள்ளதாக  நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன்படி, அந்த ஆண்டு 120 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மைத்ரிபால சிறிசேனவின் காலப்பகுதியில் அதிகளவான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் 5 ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இலங்கை மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பான ஆணைக்குழு, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு என்பன அதில் அடங்குகின்றன. 

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 2020 முதல் 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழு உட்பட 5 ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

No comments