போதை மருத்துவர்களை காப்பாற்ற முயற்சி!



யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் அண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய போதை மாத்திரைகள் வியாபாரத்தை சிக்க வைக்காமல் காப்பாற்றுவதற்கு  முக்கிய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் பின்னணியில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

அதாவது அண்மையில் யாழ் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு பெருமளவு போதை மாத்திரைகள்  வரவழைக்கப்படவுள்ளதாக  உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

குறித்த தகவலை தமது மேல் அதிகாரிகளுக்கு அவர்கள் தெரியப்படுத்திய நிலையில் அந்தத் தகவல் போதை மாத்திரை வியாபாரத்தில் தொடர்புடைய வைத்தியருக்கு குறித்த மேலதிகாரி உடனடியாக தகவல் வழங்கியுள்ளமை அம்பலத்துக்கு வந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட இருந்த போதை மாத்திரைகள் தடுக்கப்பட்டதுடன் வைத்தியசாலையில் இருந்த பெருமளவிலான போதை மாத்திரைகளும் மறைக்கப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒரு வர் தகவல் தெரிவித்தார்.

அவர் தகவல் குறிப்பிடும் போது குறித்த சம்பவமானது எமது வைத்திய துறைக்கு அப கீர்த்தியை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக  பார்க்கிறேன்.

இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுபவர்களை  ஆராய்ந்தால் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ ப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாது ரஷ்யாவில் மருத்துவ கல்வியை கற்றுவந்த வைத்தியர்களே ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. 

 இலங்கையில் மருத்துவ கல்லூரிக்கு தெரிவு செய்ய முடியாதவர்கள் பணம் கொடுத்து ரஷ்யாவில் மருத்துவ கல்வியை கற்றபின்  இலங்கையில் வைத்தியத்துறையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட முடியாதவர்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

 இவ்வாறு செயல்படுபவர்களுக்கு சட்டத்திலிருந்து காப்பாற்றுவதற்கு ரஷ்யாவில் மருத்துவப் படிப்பை மேற்கொண்ட  மேலதிகாரியே காப்பாற்றியதாக தாம் அறிந்து கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments