யாழில் உயிரை பணயம் வைத்து பயணம்!காரைநகர் - ஊர்காவற்றுறை பாதைச் சேவையை நடத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை தொடர் அசமந்தம காண்பித்துவருகின்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் போதிய எரிபொருள் இருந்தும் காரைநகர் - ஊர்காவற்றுறை பாதைச் சேவையை செயற்படுத்துவதில் அவர்கள் தொடர்ந்தும் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர் என முன்னதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

காரைநகர் - ஊர்காவற்றுறை பாதைச் சேவைக்கான பொறுப்பு வாய்ந்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அசமந்தப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ள பாதைப் பயணிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு முயன்று வருகின்றனர் .

காரைநகர்-ஊர்காவற்துறையினை இணைக்கும் வகையிலான பாதை போக்குவரத்தில் நாள் தோறும் நூற்றுக்கணக்கிலான அரச பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயணித்துவந்திருந்தனர்.

தற்போது பாதை செயற்படாமையால் சாதாரண படகுகளில் பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து பயணித்துவருகின்றனர். 

இதேவேளை, குறித்த பாதைச் சேவையை சீராக்க நடவடிக்கை எடுக்குமாறு சில தினங்களுக்கு முன்னனர் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments