மீண்டும் தடைப்பட்டது சுயஸ் கால்வாய்! 5 மணித்தியாலங்களுக்குப் பின் மீட்கப்பட்டது கப்பல்


சூயஸ் கால்வாயில் சிக்கிய எரிபொருள் டேங்கர் கப்பல் 5 மணிநேரத்திற்கு பிறகு மீட்கபபட்டது. போர்ச்சுக்கல்லில் இருந்து சவுதி அரேபிய செங்கடல் துறைமுகமான யான்புவை  நோக்கி புறப்பட்ட சிங்கப்பூரின் 'அபினிட்டி வி' என்ற சரக்கு கப்பல், தொழில்நுட்பக் கோளாறால் உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கியது.

252 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்ட கப்பல், கால்வாயை மறித்துக் கொண்ட நிலையில், ஐந்து இழுவை படகுகளை கொண்டு அந்த சரக்கு கப்பலை கரையில் இருந்து நகர்த்தப்பட்டது. இதையடுத்து, ஐந்து மணிநேரத்திற்கு பிறகு சரக்கு கப்பல் சவுதி அரேபியாவை நோக்கி புறப்பட்டது

No comments