ரஷ்யாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி!


ரஷ்யாவில் பள்ளிக்குள் புகுந்து 15 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தாக்குதல் நடத்தியவன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இசேவ்ஸ்க் பகுதியில் இத்தாக்குதல் நடைபெற்றது. இதில் 5 குழந்தைகள், 2 பாதுகாவலர்கள், 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 பேர் பலியாகினர்.

துப்பாக்கி சூடு நடத்தியவனும் தற்கொலை செய்து கொண்டான். துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்து சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் நாஜிப்படை இலச்சினை கொண்ட தொப்பியை அணிருந்திருந்தாக சம்பவ இடத்தில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments