களவாக மணல் ஏற்றுவது: நால்வர் கைது!!


கிளிநொச்சி புளியம்பொக்கணை, உழவன் ஊர் மற்றும் கல்லாறு போன்ற  பகுதிகளில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.                 

எனினும், சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 4 பேரும் காவல்துறையினரால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட  தடையப் பொருட்களை இன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments