1373 கிலோ மீற்றர் தூரம்: எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்கு மின்சார விநியோகம்!


எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்கு குறிப்பாக கீறீஸ் நாட்டுக்கு கடலுக்கு அடியில் மின்கடத்தி (கேபிள் வயர்) மூலமாக 3,000 மெகாவாட் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் ஐரோப்பிய லட்சியத் திட்டங்களில் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்த 3,000 மெகாவாட் மின்சாரம் 450,000 வீடுகளுக்கு மின்சாரத்தை வழங்கப் போதுமானது. வடக்கு எகிப்திலிருந்து நேரடியாக கிரீஸில் உள்ள அட்டிகாவுக்கு மின்சாரம் எடுத்துச்செல்லப்படும். 

1373 கிமீ நீளமுள்ள கடலுக்கடியில் உள்ள கேபிள் எகிப்தில் இருந்து ஐரோப்பாவின் மின்சார கட்டத்திற்கு 'பசுமை ஆற்றலை கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தை கோப்லோசோஸ் (Copelouzos) குழுமம் மேற்கொண்டுள்ளது. அதன் நிர்வாகம் கடந்த வாரம் எகிப்திய தலைவர்களை சந்தித்து செயல்முறையை விரைவுபடுத்தியது.

எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்து வருவதால், ஐரோப்பா எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்கிறது. 2021 ஆம் ஆண்டில் ரஷ்யா அதன் மொத்த ஆற்றல் தேவைகளில் 40 சதவீதத்தை வழங்கும் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தர். ஆனால், உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட பிறகு, எரிசக்தி விலைகள் அதிகரித்துள்ளன.

இந்த எரிபொருள் சிக்கலால் ஐரோப்பிய நாடுகள்  குளிர்காலத்தை மிகவும சிரமாக ஏற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

No comments