மட்டக்களப்பு ஜீவன் முகாலில் சில வெடிபொருட்கள் மீட்பு!


மட்டக்களப்பு கதிரவெளி பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்துள்ள பகுதியில் நிலத்தில் இருந்து பெருமளவான வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவு புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து வாழைச்சேனை நீதிமன்றத்தில் நிலத்தை தோண்டுவதற்கு அனுமதியை கோரியதையடுத்து நீதவான் அனுமதி வழங்கினார்.

இதனையடுத்து   நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் குறித்த முகாம் அமைந்துள்ள பகுதியின் நிலத்தை மண் அகழ்வும் இயந்திரம் கொண்டு தோண்டினர்.

இதன்போது 50 கலிபர் ரவைகள், ஏ.கே.எல்.எம்.ஜி ரவை இணைப்பிகளுடனான ரவைகள், மிதிவெடி -1 , ஆர்.பி.ஜி புறப்பளர் -1 என சில ஆயுத தளபாடங்கள் மீட்கப்பட்டன.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments