யாழில் 28 ஆயிரத்து 188 பேர் படுகாயம்!யுத்தம் உயிர்களை காவு கொண்ட காலம் மாறி வீதி விபத்துக்களால் மக்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

யாழில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் மாதம் ஒன்றிற்கு ஜந்திற்;கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக  வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  கடந்த 12 ஆண்டுகள்  இடம்பெற்ற விபத்துக்களின் காரணமாக 26 ஆயிரத்து 188 பேர் காயமடைந்து 623 பேர் மரணமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இவ்வாறு  அதிகரித்துள்ள வாகனப் போக்குவரத்து , விதிமுறை மீறிய பயணம்  உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் 2010 முதல் 2021 ஆம் ஆண்டு வரையான 12 ஆண்டு காலப் பகுதியிலேயே இந்த 28  ஆயிரத்து 188  பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களிலேயே  623 பேர் மரணமடைந்தும் உள்ளதாகவும் யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

No comments