மீண்டும் இலங்கைக்கு இரண்டு வருடம்?இலங்கைக்கு ஜநாவில் மீண்டும் இரண்டுவருட கால அவகாசம் வழங்கப்பட்வுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் இன்று உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் பங்ககேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் கடந்த 19 ஆம் திகதி  நியுயோர்க் சென்றடைந்தார்.

இதேவேளை, நியுயோர்க் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர்   உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பலரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், பல்வேறு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள்  மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

No comments