கனடாவில் புயல்: 500 ஆயிரம் பேர் மின்சாரம் இன்மையால் பாதிப்பு


பியோனா புயல் கனடாவின் கிழக்கு பகுதி நோவா ஸ்கோடியாவில் சனிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. 

கனடாவின் கிழக்குப் பகுதிகளில் மூன்று மாகாணங்களில் 160 கிமீ (99மீ) வேகத்தில் மழை மற்றும் காற்று வீசியது. 

அட்லாண்டிக் கடல் பகுதி மாகாணங்களான நோவா ஸ்கோடியா, பிரின்ஸ் எட்வர்ட் தீவு, நியூ பவுண்ட்லேண்ட், நியூ பிரன்சுவிக் மற்றும் கியூபெக் ஆகிய பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.  வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன.  கடுமையான வெள்ளத்தால் சில வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன.  5,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

புயல் பாதித்த பகுதிகளில் சூறாவளி காற்று தொடர்வதால், மின்சாரம் சீரமைக்க பல நாட்கள் ஆகலாம் என மின்வாரிய நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.  புயல் பாதித்த பகுதிகளுக்கு ராணுவம் உதவும் என்றும் நிலைமை மோசமாக இருப்பதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். 

புயல் பாதித்த பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய அறிக்கைகளை அதிகாரிகள் இன்று பகிர்ந்து கொள்ளவில்லை.  நோவா ஸ்கோடியாவில் கடைசியாக 2003இல் ஜுவான் புயல் தாக்கி பலத்த சேதம் ஏற்பட்டது.  தற்போது உருவாகியுள்ள பியோனா புயல், ஜுவான் புயலை விட பெரியதாகவும், 2019இல் கனடாவை தாக்கிய டோரியன் புயலை விட வலிமையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments