தமிழ் இளைஞர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்!விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க முற்பட்டதாக பயங்கரவாத  தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன்  தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்கின்றனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பூநகரி முக்கொம்பன் பகுதியில் கைது செய்யப்பட் உ.உமாகாந்தன், ர.சயந்தன், வி.இன்பராஜ், மகேந்திரன் பார்த்தீபன் மற்றும் வடமராட்சி தாளைடியை சேர்ந்த செ.உதயசிவம் உட்பட 12 பேர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments