புற்றுநோய்க்கும் மருந்தில்லையாம்இலங்கையில் புற்று நோயை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் 60 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலமையினால் மஹரகம வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தவிடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே, புற்று நோயின் தாக்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட நேரத்தில் புற்றுநோய்க்கான மருந்துகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் புற்றுநோயினால் ஏற்படும் இறப்புக்களை தடுக்க முடியும். எனவே அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இதற்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

No comments