நல்லூரில் குழப்பத்துடன் நிறைவடைந்தது திலீபன் நினைவேந்தல்
அரச புலனாய்வாளர்களால் இயக்கப்படுபவர்களின் சதிகளைத் தாண்டித் தியாகதீபம் நினைவுகூரப்பட்டார் என முன்னணி சட்டத்தரணி சுகாஸ்
தெரிவித்துள்ளார். சதிகாரர்களின் முகமூடிகள் கழன்றன. பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் அரச ஆதரவு ஊடகங்கள் தீவிரம்.குறிப்பாக கோத்தபாய பினாமி ஊடகமான டாண் தொலைக்காட்சி மும்முரமாகியுள்ளது.எனினும் மக்களுக்கு உண்மையை உரைக்கச் சகல விடயங்களும் ஆதாரங்களும் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.தமிழ்த் தேசிய வரலாறு கடத்தப்படுவதை எவராலும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது என முன்னணியின் சுகாஸ் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நல்லூரில் இன்றைய தினம் நடந்தவை பற்றிய ஒரு பார்வை.
40 நிமிட பொறுமைக்கு பின் அடாத்தாக காவடியை இறக்கிய முன்னாள் போராளிகள்.
காலை 10.40 மணியளவில் நினைவிடத்திற்கு வந்த காவடியை 11.15 மணி தாண்டியும் இறக்க விடாது தடுத்து வைத்திருந்த காங்கிரசினரின் தடைகளை மீறி முன்னாள் போராளிகள் காவடியை இறக்க முற்பட்ட போது தர்க்கம் ஏற்பட்டது. அவற்றையும் மீறி முன்னாள் போராளிகள் காவடியை நினைவிடத்தின் முன்பாக இறங்கினார்கள்.
ஜனநாயகப் போராளிகள் கட்சியினைச் சேர்ந்த பிரபா என்று அழைக்கப்படும் மறவன்புலவு பிரபாகரன் பொதுச் சுடரினை நகர்த்த முற்பட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியினைச் சேர்ந்த பிரபா என்று அழைக்கப்படும் மறவன்புலவு பிரபாகரன் பொதுச் சுடரினை நகர்த்த முற்பட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒருவர் காயம்.
காவடியை இறக்க தடை ஏற்படுத்தும் விதமாக பிரதான தீபத்தினை காங்கிரசினர் நினைவிடத்தின் முன்பாக வைத்திருந்தனர். காவடி இறக்க ஏதுவாக அதனை சற்று தள்ளி வைக்குமாறு கூறிய போது ஏற்பட்ட தள்ளு முள்ளில் , தீபத்தின் சுடு எண்ணெய் பட்டு ஒருவர் காயங்களுக்கு உள்ளானார்.
அவரை அங்கிருந்தவர்கள் நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
யாழ் பல்கலைக்ககழ மாணவர்களால் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று காலை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதன் பொழுது பொதுச்சுடரேற்றப்பட்டு மாணவர்களால் ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் பொழுது யாழ் பல்கலைகக்களழக மாணவர்கள் யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தினர்,விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment