பழைய இரும்பு பொறுக்கவும் சுமா அன் கோவிற்கு தடை!விழுந்து கிடக்கும் தமது ஆதரவை தூக்கி நிறுத்த சுமந்திரன் அன் கோ எவ்வளவு குத்தி முறிந்தாலும் தமிழ் மக்கள் கண்டுகொள்வதாகவில்லை.

இந்நிலையில் மீண்டும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான ஊர்தி வழிப் போராட்டம் சுமந்திரன் அன் கோவினால் யாழில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கையெழுத்து வேட்டை பெறும் போராட்டமென தெரிவிக்கப்பட்டு இம்முறை சுமந்திரன் பழைய இரும்பு வியாபாரிகளது வாகனமொன்றை செலுத்தி பரப்புரையினை தொடங்கியிருந்தார்.

எனினும் அவரது வாகன பயணம் மீம்ஸ் தயாரிப்பவர்களது கவனத்திற்கு செல்ல அது வைரலாகியிருக்கின்றது.

பழைய இரும்பு சேகரிக்கும் போர்வையில் சட்டவிரோத செயற்பாடுகளில் வாகனங்கள் ஈடுபடுவதனால் அவை தீவகத்திற்குள் நுழைவதற்கு வேலணை பிரதேச சபையினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம் என கட்சிக்காரரே நையாண்டி செய்ய தொடங்கியுள்ளனர்.குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினரால் முன்னெடுத்து செல்லப்பட்ட இப்போராட்டம் நாட்டில் ஏற்ப்பட்ட எரிபொருள் பிரச்சனை காரணமாக தடைப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது அடுத்த கட்டமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் இந்த போராட்டம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களை வதைக்கும் கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு ஆரம்பமான ஊர்தி வழிப் போராட்டம் காங்கேசன்துறை தொடக்கம் 25 மாவட்டங்களுக்கும் சென்று இறுதியில் அம்பாந்தோட்டை நகரைச் சென்றடையவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பும் இணைந்து முன்னெடுக்கும் இந்தக் கையெழுத்துத் திரட்டும் பிரசார நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.

இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட காலிமுகத்திடல் போராட்டச் செயற்பாட்டாளர்கள், இலங்கைத் தமிழரசுக்  கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி. சேயோன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


No comments