வாரிசு அரசியல் கலகலக்கும் இலங்கை!இலங்கை அரசியலில் புதிய முகங்கள் களமிறங்க தயாராகின்றன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரனதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய அரசியல் கட்சியான நவ சிறீலங்கா நிதாஹஸ் பக்சயவின் உறுப்பினராக விரைவில் இலங்கை அரசியலில் பிரவேசம் செய்யவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதாசன யாப்பா இதனை மறுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவை பொலன்னறுவை மேற்கு பிரதேசத்தின் பிரதான அமைப்பாளராக நியமிப்பதாக சுதந்திரக் கட்சி செப்டம்பர் முதலாம் திகதி அறிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஏற்கனவே தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில், எதிர்வரும் தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளின் நான்கு மகன்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments