சிறுவர் துஸ்பிரயோகம்:ஆசிரியர் கைது! திருகோணமலையில் மேலதிக வகுப்பிற்கு சென்ற மூன்று ஆண் மாணவர்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல ஆங்கில ஆசிரியரொருவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ஆசிரியர் தொடர்பில் மாணவர்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்தியிருந்த போதிலும் பெற்றோர்கள் அதனை பெரிதுப்படுத்தாமல் இருந்த நிலையில் சிறுவர் பாதுகாப்பு நிலையத்திற்கு குறித்த ஆசிரியர் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உப்புவெளி காவல் நிலையத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்த மாணவர்களின் வாக்குமூலத்தை பெற்றதைடுத்து பிரபல ஆங்கில ஆசிரியரை கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த மாணவர்கள் தொடர்பிலான சட்ட வைத்திய அறிக்கை நீதிமன்றத்திற்கு கிடைக்கும் வரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments