யாழ்,முல்லையிலும் போராட்டங்கள்!மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட தரப்புகள் மீது அரச புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளினாலும் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினுடைய ஏற்பாட்டில், இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.

அதேவேளை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அமைப்பினால் யாழ்ப்பாணத்திலும்; இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளி, எமது நிலம் எமக்கு வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டதை நீக்கு, வடக்கு கிழக்கில் மனித உரிமை காவலர்களை அச்சுறுத்துவதை நிறுத்து, அரசு மனித உரிமை அனைவருக்கும் சொந்தமானது என்ற பதாகைகளை தாங்கியவாறுபோராட்டத்தில் ஈடுபட்டனர்.


No comments