சமன் ரத்னப்பிரிய : நவீன யூதாஸ்!சமன் ரத்னப்பிரிய ஒரு நவீன யூதாஸ், அவர் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, தனது தோழர்களைக் காட்டிக்கொடுத்து, சொந்த மனசாட்சியைக் காட்டிக்கொடுத்து, மிகக் கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர் ரதிது சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிற்சங்க செயற்பாட்டாளரான “சமன் ரத்னப்பிரிய” ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அரசியலமைப்பின் 41(1) சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

No comments