பழைய பூங்காவில் காணி வேண்டுமாம்!யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில் 5 பரப்பு காணியை பொலிசாரின் பயன்பாட்டிற்கு வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயா மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிசாரின் தங்கும் செயல்பாட்டிற்காக 5 பரப்பு காணியை வழங்குமாறு கோரியே  கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு அனுப்பிய கடிதம் தொடர்பில் பதிலளித்துள்ள மாவட்ட அரச அதிபர் பழைய பூங்காப் பகுதியானது ஓர் நம்புக்கை நிதியப் பொறுப்பிற்கு உட்பட்ட பகுதியாகும் எனவே அப் பிரதேசத்தில் இருந்து நிலம் வழங்க முடியாது எனப் பதிலளித்துள்ளார்.

இதேநேரம் வடக்கு மாகாண பிரதம செயலாளரின் தங்கு விடுதிக்காக கடந்த காலத்தில் பழைய பூங்காவில் நிலம் கோரப்பட்டபோதும் மறுக்கக்கட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments