தமிழகமென திட்டியில் இறக்கிவிடப்பட்டோர் கைது!


தமிழக முதலமைச்சரின் சகோதரியும் நாடாளுமன்ற உறுப்பனிருமான கனிமொழியை இந்தியாவிற்கான இலங்கை தூதர் மிலிந்த மொகொட சந்தித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

ரணிலின் விசுவாசியான மிலிந்த மொறகொட  பின்னர் கோத்தபாயிவனால் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்படடிருந்தார்.

இதனிடையே திருகோணமலையில் இருந்து  தமிழ்நாட்டிற்குச் சென்றவர்களை இலங்கை எல்லையில் இறக்கிவிட்டு படகு ஓட்டி தப்பிச் சென்றுள்ளார்.

திருகோணமலை மற்றும் வவுனியாவைச் செர்ந்த 13 பேர் நேற்று இரவு மன்னார் ஊடாக தமிழகம் தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு படகு மூலம. தமிழகம் செல்ல முற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு ஓட்டி தலைமன்னார் இராமேஸ்வரம் இடையே உள்ள 6ஆவது தீடையில் இறக்கி விட்டுள்ளார்.

இலங்கை இந்தியாவின் இடையே உள்ள 11 தீடைகளில் 6 தீடை இலங்கை எல்லையிலும் 5 தீடை இந்திய எல்லையிலும் உள்ளது. இதனால் 6 ஆவது தீடையில் நின்றவர்களை இன்று காலை மன்னார் கடற்படையினர் சென்று ஏற்றி வந்துள்ளதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.No comments