சிறார் கல்வி சிங்கள மயமாக்கப்படுகிறது!கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில்  இலங்கை பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு படை பிரிவில் கீழ் செயற்படுத்தப்படும் சிறார் கல்வி நிலையங்கள் சிங்கள மயமாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் சம்பளம் பெறும்  ஆசிரியர்கள் கற்பிக்கும் முன்பள்ளிகளின் பெயர்களை சிவில் பாதுகாப்பு படைப்பிரிவு மாற்றி வருகிறது. இச் செயற்பாடு அந்தந்த முன்பள்ளி சமூகங்களிடைய பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாகாண முதலமைச்சராக  சி.வி.விக்கினேஸ்வரன் பணியாற்றிய காலப்பகுதியினில் படையினரின் கீழுள்ள முன்பள்ளிகளை மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர முன்னெடுத்த முயற்சி வெற்றி பெற்றிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. 


No comments