வவுனியாவில் மோதல்: காதைக் கடித்து துண்டாடிய இளைஞன்!


வவுனியாவில் இரு இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை மற்றொருவர் கடித்துக் குதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது. 

வவுனியா வீரபுரம் சினத்தம்பனைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது.  படுகாயமடைந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு இளைஞர்களுக்கும் வீதியில் சந்தித்தவேளை முதலில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக வெடித்து வாள்வெட்டில் முடிந்தது. அத்துடன் ஒருவர் மற்றொருவரின் காதைக் கடித்து துண்டாடியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments