ஹிருனிகா குற்றவாளியா? தெரியாது!ஜூலை 6 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 10 பேரை சந்தேக நபர்களாக்க கொழும்பு கோட்டை நீதவான் மறுத்துள்ளார்.

ஹிருணிகா உள்ளிட்ட 10 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

பிரேமச்சந்திர மற்றும் பலர், கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே முதலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சந்தேக நபர்களை பெயரிடுமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோருவது சட்டவிரோதமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த நபரை சந்தேகநபர்களாக குறிப்பிடுவதற்கு நீதவான் மறுத்துள்ளதுடன், எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.No comments