கொக்குவில் - குளப்பிட்டியில் மோதல்: ஒருவர் படுகாயம்!


யாழ்ப்பாணம் - கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியதில், கும்பல் ஒன்றினால் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments