யாழில் பெற்றோல் நிரப்ப நின்றவர் உயிரிழந்தார்


யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பெற்றோல் பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த சிவசோதிலிங்கம் சொரூபன் (வயது 38) என அடையாளம் காணப்பட்டார்.

குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளுக்கான பெற்றோலை பெற்றுக்கொள்ள தனது கியூ ஆர் குறியீட்டை காண்பித்த நிலையில் , உந்துருளியுடன் மயங்கி சரிந்து விழுந்துள்ளார். 

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்துள்ளார். ஆரம்ப கட்ட வைத்திய பரிசோதனைகளின் அடிப்படையில் உயிரிழப்புக்கு மாரடைப்பே காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது. 

No comments