கோட்டா தாய்லாந்தில் தங்கியிருப்பார் - தாய்லாந்து பிரதமர்


இலங்கையின் முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார்.

வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடும் வரையிலும் தாய்லாந்தில் அவர் தற்காலிகமாக தங்கியிருப்பார் என்றும் தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று வியாழக்கிழமை தாய்லாந்து செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

நேற்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியிடம் உள்ள இராஜதந்திர கடவுச்சீட்டு மூலம் அவருக்கு 90 நாட்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கலாம் எனவும் அவர் எப்போது நாட்டிற்கு வருவார் என அறிவிக்கப்படவில்லை எனவும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டானி ப்ளீட்ஸ் தெரிவித்திருந்தார்.

தாய்லாந்திற்குள் நுழைவது தற்காலிகமாக தங்குவதற்கு மாத்திரமேஇ தாய்லாந்தில் அரசியல் தஞ்சம் அடையும் எண்ணம் முன்னாள் ஜனாதிபதிக்கு இல்லை எனவும், அவர் தாய்லாந்தில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்வார் எனவும் இலங்கை தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவித்ததாகவும் டானி ப்ளீட்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார்.

வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடும் வரையிலும் தாய்லாந்தில் அவர் தற்காலிகமாக தங்கியிருப்பார் என்றும் தாய்லாந்து பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏழு தசாப்தங்களில் இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு, முன்னெப்போதும் இல்லாத அமைதியின்மையைத் தொடர்ந்து, ஜூலை 14 அன்று மாலைத்தீவு வழியாக சிங்கப்பூருக்கு ராஜபக்ச தப்பிச் சென்றார்.

No comments