245 மில்லியன் மதிப்புள்ள கோகோயினுடன் போலந்து நாட்டவர் இலங்கையில் கைது


245 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் 60 வயதுடைய போலந்து நாட்டவர் ஒருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என சுங்க பிரதிப் பணிப்பாளர் (சட்ட) மற்றும் ஊடகப் பேச்சாளர். சுதத்த சில்வா தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர் கொலம்பியாவில் இருந்து டோகா வழியாக கியூ.ஆர். 662 என்ற விமானத்தில் வந்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரால் அந்த நேரத்தில் அவர் கொண்டு வந்த பொருட்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் பொருட்களை எடுப்பதற்காக மாலை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், பொருட்களை சோதனைக்கு கொண்டு சென்றனர். 

சந்தேகநபர் தொலைநகல் இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் காகித உருளைகளில் மறைத்து வைத்து சுமார் 05 கிலோ கிராம் போதைப்பொருளை கொண்டு வந்துள்ளார்.

சோதனையின் போது, ​​பயன்படுத்தப்பட்ட தொலைநகல் இயந்திரத்தில் (fax machine) பல காகிதச் சுருள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடையுள்ள கொக்கைனை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட போலந்து நாட்டவரை மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறைப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. 

No comments