இந்தியாவே நல்ல நண்பன்:கெஞ்சும் இந்தியா



பிராந்தியம் முக்கியத்துவம் பெறுவதால், பல நாடுகள் இந்திய பெருங்கடலில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கின்றன என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட சீன ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தியப் பெருங்கடல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மற்றொரு விசேட அம்சமாக மாறாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா தனது தேசிய நலன்களை கவனித்துக்கொள்ள வேண்டும், ஆனால் பிராந்தியத்தில் தனித்துவத்தை கோர முடியாது.

இந்தியாவின் அண்டை நாடுகள் கலாசார ரீதியாக ஒன்றுப்பட்டுள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும் பிணைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்தை சமாளிப்பதற்கு முன்வருவதற்கு உதவிய ஒரே அண்டை நாடு இந்தியா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments