காசா மீது இஸ்ரேல் படைகள் வான் தாக்குதல்: போராளிக் குழுத் தளபதி பலி! 7 பேர் உயிரிழப்பு!


காசா மீது இஸ்ரேல் படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் பாலஸ்தீன போராளி அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.

3 நாட்களுக்கு முன் மேற்கு கரையில் பதுங்கியிருந்த பாலஸ்தீன போராளி அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை கைது செய்த இஸ்ரேல் படைகள், நேற்று காசா மீது வான் தாக்குதல் நடத்தின.

இதில், இஸ்ரேலில் பல தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்திய தைசீர் அல் ஜபாரி என்பவர் கொல்லப்பட்டார்.

பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர்.

No comments