ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படும் எடுத்தவரும் கைது!


இலங்கையில் கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தெரணியகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய சமன்புரகம பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

No comments