பௌத்தத்தை வலுப்படுத்த இந்தியா உதவி!

 


இலங்கையில் பௌத்த தொடர்புகளின் மேம்பாட்டுக்கான 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை வழங்கியதை இலங்கைக்கான இந்திய தூதர் உறுதிப்படுத்தியுள்ளார்.

2022 மார்ச் மாதம் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சமயத்தில் இரு அரசாங்கங்களுக்கும் இடையில் எட்டு முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. பௌத்த தொடர்புகளின் மேம்பாட்டுக்கான 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை ஈறாக, பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்கள் வரையிலான பல்வேறு துறைகளையும் சார்ந்ததாக இந்த உடன்படிக்கைகள் அமைகின்றன.

இதனிடையே இலங்கையின் வான் பாதுகாப்பினை வலுப்படுத்த இந்திய அரசு வழங்கியுள்ள வேவுவிமானத்தை இலங்கை ஜனாதிபதி நேரடியாக இன்று கொழும்பில் நிகழ்வொன்றில் கையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments