சீன கப்பலிற்கு ரணில் அரசு அனுமதி!

 


சீனாவின் செயற்கைக் கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் – 5 கப்பல் அம்பாந்தோட்டையில் தரித்து நிற்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்வதை எதிர்ப்பதற்கான உறுதியான காரணங்களை இந்தியாவும் அமெரிக்காவும் முன்வைக்க தவறியுள்ளதை தொடர்ந்தே, இலங்கை கப்பலிற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து கப்பல் 16 ம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழையும்.

முதலில் கப்பல் 11 ம் திகதி துறைமுகத்திற்குள் நுழையும் என திட்டமிடப்பட்டிருந்தது, எனினும் இந்தியா தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி கரிசனை வெளியிட்டதை தொடர்ந்து இலங்கை கப்பலிற்கான அனுமதியை தாமதித்திருந்தது.

No comments