காலையில் எழுந்து வெளியே பார்த்ததும் வீட்டின் வெளியே பொிய கப்பல்!
நோர்வேயில் நபர் ஒருவர் காலையில் படுகையில் இருந்து எழுந்தவுடன் வீட்டின் தோட்டத்தில் ஒரு பொிய கொள்கலன்களை ஏற்றும் சரங்குக் கப்பல்
நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு 35 மீட்டர் (443 அடி) நீளமுள்ள கப்பல் ஜோஹன் ஹெல்பெர்க்கின் வீட்டின் ஒரு மீட்டர் தூரத்தில் இருந்தது.
கப்பல் முழு வேகத்தில் நிலத்தை நோக்கிச் சென்றபோது அதன் சத்தம் கேட்டு விழித்தெழுந்த அண்டை வீட்டாரான ஜோஸ்டீன் ஜோர்கென்சன், ஹெல்பெர்க்கின் வீட்டிற்கு ஓடி வீட்டில் கதவு மணி பல முறை அடித்தார். ஆனால் ஜோஹன் ஹெல்பெர்க் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஜோஸ்டீன் ஜோர்கென்சன் தொலைபேசி வழியாக ஜோஹன் ஹெல்பெர்க்கைத் தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவித்தார்.
இதன்பின்னர் ஜோஹன் தனது வீட்டின் சாளரம் வழியாக வெளியே பார்த்தபோது மிகப் பொிய கப்பல் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
கப்பலின் மேற்பரப்பதைப் பார்க்க எனது கழுத்தை மேல் நோக்கி வளைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் கப்பல் தெற்குப் பங்கள் 5 மீட்டர் சென்றிருந்தால் வீட்டுக்குள் கப்பல் நுழைந்திருக்கும். எனக்கு எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை என அவர் மேலும் சம்பவத்தை விபரித்தார்.
சைப்ரஸ் கொடியுடன் கூடிய NCL சால்டன் என்ற சரக்குக் கப்பலில் 16 பேர் இருந்தனர். ட்ரொன்ட்ஹெய்ம் ஃப்ஜோர்டு வழியாக ஓர்காஞ்சருக்கு தென்மேற்கே பயணித்துக் கொண்டிருந்தபோது அது திசைதிருப்பப்பட்டது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, நோர்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இது ஒரு கடுமையான சம்பவம் என்றும் யாரும் காயமடையவில்லை என்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றும் கப்பலை வாடகைக்கு எடுத்த NCL இன் தலைவர் கூறினார்.
தற்போது, சம்பவத்திற்கு என்ன காரணம் என்று எங்களுக்குத் தெரியவில்லை, மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொடர்ச்சியான விசாரணையின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம் என்று நிர்வாக இயக்குனர் பென்ட் ஹெட்லேண்ட் கூறினார்.
Post a Comment