பிரதிநிதிகள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு!இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான விசேட குழுவினால் தேர்தல் முறைமைக்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவுகள் குறித்து இன்று கலந்துரையாடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடல்களின் பின்னர் அரசியல் கட்சிகலின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments