போராட்ட அழைப்பு: முன்னர் பிணையில் விடுதலை!


நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாலினை 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் ஸ்டாலினை ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜோசப் ஸ்டாலின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கடந்த வெள்ளிக்கிழமை (5) புதிய ஜாமீன் மனுவை ஆதரிப்பதற்காக முன்கூட்டியே திகதியைக் கோரி மனு தாக்கல் செய்தனர்.

சந்தேகநபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆஜரானார். 


No comments