திருமலை, வவுனியா, மன்னார், அம்பாறை மாநகர சபைகளாக !திருகோணமலை, வவுனியா, மன்னார், அம்பாறை நகர சபைகள் மாநகர சபைகளாக தரம் உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் 07 மாநகர சபைகளையும், 03 நகர சபைகளையும் புதிதாக  உருவாக்குவதற்கு நேற்றைய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய தற்போதைய  நகரசபைகளாக உள்ள களுத்துறை, புத்தளம், திருகோணமலை, வவுனியா, மன்னார், அம்பாறை, கேகாலை ஆகிய நகர சபைகள்  என்பன புதிய மாநகர சபைகளாக தரமுயர்த்தப்படுகின்றன.

அதேவேளை தற்போது பிரதேச சபைகளாக உள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை என்பனவும்  நகர சபைகளாக தரமுயர்த்தப்படுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட 10 சபைகளில் 06 சபைகள் வடக்கு கிழக்கில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments