ஜோசப் ஸ்டாலின் விவகாரம்:வலுக்கிறது போராட்டம்! இலங்கை ஆசிரிய சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 ம் திகதி முதல் எதிர்ப்பு நடவடிக்கையிலும், ஆர்பாட்டத்திலும் ஈடுபட போவதாகவும் அடுத்த வாரத்தை எதிர்ப்பு வாரமாகவும் ஆசிரிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

இதற்கு மேலாக ஜோசப் ஸ்டாலின் 12 ம் திகதிக்குள் விடுதலை செய்யப்படாவிட்டால் அடுத்தகட்டமாக கடும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட போவதாகவும், அது தொடர்பான விபரங்களை பின்னர் அறிவிப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

No comments