ரணில் பொய் சொல்கிறார் - சுமந்திரன்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொய் பேசுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் பலர் தனக்கு வாக்களித்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்புடனான சந்திப்பில் அண்மையில் கூறியிருந்தார்.

தற்போது இதனை சுமந்திரன் மறுத்துள்ளதோடு, ஜனாதிபதி பொய் கூறியதாகவும் டுவிட் செய்துள்ளார். 

ஜனாதிபதி பொய் பேசுகிறார். த. தே. கூ. டலஸ் அலகபெருமவுக்கு வாக்களிப்பதாக எடுத்த தீர்மானம் ஏகமனதானது மட்டுமல்ல, ரணிலுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை கூட்டத்தில் எந்தக் கட்டத்திலும் ஒருவர் கூட கூறியிருக்கவில்லை.எனவும் சுமந்திரன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

No comments