நல்லூர் தேரும்:தியாகி திலீபனும்!



வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

இன்று காலை வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து 6.15 மணியளவில் முருகப் பெருமான் தேருக்கு எழுந்தருளினார்.

இதேவேளை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத் தேரோட்டம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றிருந்தது.

இன்று திருவிழாவுக்காக இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பெரும்பாலான மக்கள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்த்திருவிழாவை தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடி இறக்க திருவிழாவும் இடம் பெறும்.


இதனிடையே நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் தூபியும் இன்று மக்களது ஆர்வத்தை தோற்றுவித்திருந்தது.

திலீபனின் தூபியில் கற்பூரமேற்றி பெருமளவில் மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. 




No comments