தொடங்கியது சீன ஆட்டம்!அம்பாந்தோட்டைக்கான  சீனக் கப்பலின் வருகையை இடைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த விளம்பரப் பிரசாரத்தை சீன சமூக ஊடகத் தளம் இடைநிறுத்தியுள்ளது.

இலங்கை அதிகாரிகள் இந்த பிரச்சாரத்தை வெள்ளிக்கிழமை ‘Douyin’ இல் தொடங்க ஏற்பாடு செய்தனர். எனினும் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என இலங்கை தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து ‘யுவான் வாங் 5’ ஆராய்ச்சிக் கப்பலின் துறைமுக அழைப்பை இலங்கை ஒத்திவைத்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது நடந்ததாக இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்.


மேலும், சீனாவில் உள்ள பல சமூக ஊடகத் தளங்கள் இலங்கை மீது எதிர்மறையான கருத்துக்களால் சூடுபிடிப்பதாக உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் சில சீன பல்பொருள் அங்காடிகள் இலங்கை பொருட்களை கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தி வருவதாகவும் தெரியவருகிறது.

No comments