பொதுஜனபெரமுனவை தாக்கியவர்கள் கைது தொடர்கின்றது



கோத்தபாயவின் விசுவாசிகளை தாக்கியவர்களை கைது செய்யும் வேட்டை தொடர்கின்றது.மே9  பொதுஜனபெரமுன தலைமைகளைது உத்தரவை ஏற்று அமுல்படுத்திய தென்னக்கோனை தாக்கியவரகளும் கைதாகின்றனர்.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தாக்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மே மாதம் 10ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், சந்தேகநபர்கள் மூவரும் நேற்று மாலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் 31, 51 மற்றும் 52 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் பிட்டபெத்தர, கொழும்பு-15 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, ஊரடங்கு உத்தரவை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

No comments