ஆமி திறக்கிறது நல்லிணக்க மையம்!

ஜநா அமர்வு ஆரம்பிக்கின்ற காலப்பகுதிகளில் இம்முறை இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை உருவாக்கும் முகமாக நல்லிணக்க மையம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்பை இராணுவத் தளபதி விக்கும் லியனகே இன்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அவர் நல்லிணக்க மையத்தை திறந்து வைத்தார்.

புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட விக்கும் லியனகே முதன்முறையாக இன்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.அவரை பலாலி இராணுவ தளத்தில் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர வரவேற்றிருந்தார்.

அதேவேளை யாழ்ப்பாணம், பலாலி சந்திப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களது காணியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையத்தை விக்கும் லியனகே இன்று திறந்து வைத்திருந்தார்.


No comments