நேற்று மட்டும் பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கு 1300 ஏதிலிகள் உள்நுழைவு!


பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர் ஏதிலிகள் 1300 பேர் ஆங்கிலக் கால்வாய் ஊடாக நுழைந்துள்ளனர். 

இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம், 1,295 புலம்பெயர்ந்தோர் வந்திருப்பதாகக் கூறியது.

இதுவே நாள் ஒன்றுக்கு படகுள் மூலம் உள்நுழைந்த புலம்பெயர்ந்தோரின் அதிக பட்ச எண்ணிக்கை இதுவாகும்.

நேற்று திங்கட்கிழமை 27 சிறிய படகுகள் ஆபத்தான கடல் வழியாக டோவர் துறைமுகத்தை வந்தடைந்ததாக அமைச்சகம் மேலும் கூறியது.

2021 இல் 12,500 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை பிரான்சில் இருந்து சிறிய படகுகளில் 22,670 பேர் இங்கிலாந்திற்குள் நுழைந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 60,000 ஆக அதிகரிக்கலாம் என்று சமீபத்திய இங்கிலாந்து நாடாளுமன்ற அறிக்கை கூறியுள்ளது.

No comments