தவறான காலநிலை முன்னறிப்பு: வான வேடிக்கை நிகழ்வு இரத்து! அதிகாரிகள் பணி நீக்கம்!!


ஹங்கோியில் நடைபெறவிருந்து பொிய வான வேடிக்கை நிகழ்வு மோசமான வானிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

அத்துடன் வானிலை முன்னறிவிப்பு சேவையின் தலைவரையும் அவரது துணைத் தலைவரையும் பணிநீக்கம் செய்தது. மோசமான வானிலை தொடர்பில் இவர்கள் தவறான தகவலை அளித்துள்ளனர். இதனால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஹங்கேரிய அரசை கொண்டாடும் வகையில், புடாபெஸ்டில் திட்டமிடப்பட்ட குறிப்பாக ஐரோப்பாவில் மிகப்பெரியது வானவேடிக்கை நிகழ்வை சனிக்கிழமையன்று ஒழுங்கு படுத்தியிருந்தது. இடியுடன் கூடிய மழை மற்றும் காற்றின் வேகத்தால் வான வேடிக்கை நிகழ்வு இரத்து செய்யப்பட்டது. 

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NMS) கொர்னேலியா ரேடிக்ஸ் மற்றும் கியுலா ஹார்வத் ஆகியோர் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் லாஸ்லோ பால்கோவிக்ஸ் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

அரசாங்க சார்பு ஊடகங்கள் வானிலை ஏஜென்சியை விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது.

No comments