மன்னாரில் அதானி:இந்திய கடற்படை ரோந்து!

 


மன்னாரில் 286 மெகா வோற் கொள்ளளவுள்ள, பூநகரியில் 234 மெகா வோற் கொள்ளளவுள்ள 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட இரண்டு காற்றாலைத் திட்ட முதலீட்டொன்றுக்கு அதானி கிறீன் எனர்ஜிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல்  நேற்றையதினம் (16) நங்கூரமிட்டதை அடுத்து தமிழகம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடிஉள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகொப்டர்கள் உள்ளிட்டவை இடைவிடாத ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments